“T20 யில் விராட் கோலி, ரோஹித் இல்லாதது ரொம்ப நல்லது”…, ராகுல் டிராவிட் ஓபன் டாக்!!

0
"T20 யில் விராட் கோலி, ரோஹித் இல்லாதது ரொம்ப நல்லது"..., ராகுல் டிராவிட் ஓபன் டாக்!!

இலங்கை அணிக்கு எதிராக இளம் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எதிர்கால திட்டம் குறித்து முடிவை கூறியுள்ளார்.

ராகுல் டிராவிட்:

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளது. இந்த தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெற இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும். இதனால் நாளைய போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், 2வது போட்டி குறித்தும் இளம் இந்திய அணி குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இவர் கூறியதாவது, டி20 உலக கோப்பையின் கடைசி போட்டியில் விளையாடிய 3 அல்லது 4 வீரர்கள் மட்டும் தான் இலங்கைக்கு எதிரான பிளேயிங் லெவனில் விளையாடி வருகிறார்கள்.

நோ பாலில் ஹாட்ரிக் படைத்த அர்ஷ்தீப் சிங்…, ஒரு போட்டியால் மோசமான சாதனையில் முதலிடம்!!

இந்த போட்டியில் விளையாடும் இளம் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி பல சோதனை முயற்சியில் இறங்க உள்ளோம். மேலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்க இந்த வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள், ஒருநாள் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக கவனம் செலுத்தி வருவதால், இளம் வீரர்களை டி20யில் பயன்படுத்த அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here