பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை GST க்குள் கொண்டு வர திட்டம்? – வெளியான தகவல்!!

0
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(04.11.2022)-முழு விவரம் உள்ளே!
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(04.11.2022)-முழு விவரம் உள்ளே!

பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டி நடைமுறைக்கு கொண்டு வர திட்டம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய நடைமுறை:

கொரோனா பரவல் காலகட்டத்தில் எண்ணை நிறுவனங்களின் விலை மதிப்பு சற்று குறைந்த நிலையில் காணப்பட்டது.  இது மட்டுமல்லாமல், பொது முடக்கம் அமலாகி இருந்ததால்  வாகன பயன்பாடு குறைந்து இருந்தது.  இதனால், இதன் விலையும் குறைந்து இருந்தது.  இதனை அடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இதன் விலை உச்சத்தை தொட்டது.

அதாவது, நாட்டின் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து  அதனையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. இதனை அடுத்து, இந்த விலை குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடம் பரவலாக காணப்பட்டது.  இதனை அடுத்து, இந்த ஏரிபொருட்களை ஜிஎஸ்டி நடைமுறைக்குள்  கொண்டு வர வேண்டும் எனவும்  கோரிக்கை வைத்தனர்.

ஆனால், இந்த எரிபொருள் மீதான கலால் வரியையே குறைக்காத மத்திய அரசு பொதுமக்களின் இந்த கோரிக்கையை முற்றிலுமாக தவிர்த்து வந்தது.  இருந்தாலும், ஒரு சில மாநிலங்கள் இதன் மீதான வாட் வரியை மட்டும் குறைத்து வந்தனர். இதனால் ஒரு சில காசுகள் குறைந்ததே தவிர பெரிய  அளவில் மாற்றங்கள் வரவில்லை.  இந்த நிலையில், 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் நாளை மறுநாள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூட உள்ளது.

இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.  இதனால், இதன் விலை மதிப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், SWIGGY  மற்றும் ZOMATO போன்ற நிறுவனங்களையும் இந்த திட்டத்துக்குள் கொண்டு வந்து 5% வரி விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here