ச்சே.., எல்லாம் உன் வீட்டோட தரித்திரியம் தான்.., மூர்த்தியை அவமானப்படுத்தும் பார்வதி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடு!!

0
ச்சே.., எல்லாம் உன் வீட்டோட தரித்திரியம் தான்.., மூர்த்தியை அவமானப்படுத்தும் பார்வதி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடு!!
ச்சே.., எல்லாம் உன் வீட்டோட தரித்திரியம் தான்.., மூர்த்தியை அவமானப்படுத்தும் பார்வதி.., பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடு!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் பார்வதி தனத்திடம் என் பொண்ணுக்கு நெனச்ச மாதிரி கல்யாணமும் நடக்கல. அப்போ இருந்து தொடங்கிய பிரச்சனை, இன்னும் அவ வாழ்க்கையில முடியல. ஒவ்வொரு விஷயத்துக்கும் என் பொண்ணு கஷ்டப்பட்டு கொண்டே தான் இருக்கா என்று அழுக தனம் அவரை சமாதானம் படுத்துகிறார். கண்டிப்பா முல்லையும் கதிரும் சந்தோஷமாக இருப்பாங்க என்று தனம் சொல்ல கண்டிப்பாக நடக்குமா? என்று பார்வதி கேட்க அவரை நடக்கும் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த பக்கம் கதிர் வருத்தப்படுவதை பார்த்து, மீனா, ஜீவா ஆறுதல் சொல்ல, முல்லை இல்லாத வாழ்க்கையை என்னால நினச்சு கூட பார்க்க முடியாது என ஜீவாவிடம் சொல்லி அழுகிறார். அடுத்ததாக மூர்த்தி தன்னுடைய அம்மா, அப்பாவிடம் கதிர் இதுவரைக்கும் எவ்வளவோ கஷ்டத்தை அனுபவிச்சிருக்கான். ஆனா அவனுக்கு மட்டும் பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கு என்று சொல்லி வருத்தப்படுகிறார். இந்த பக்கம் தனம் கோவிலில் முல்லைக்கு எதுவும் ஆக கூடாது என சாமியிடம் வேண்டுகிறார். பின் அவரை சமாதானப்படுத்தி ஐஸ்வர்யா வீட்டுக்கு வர சொல்கிறார்.

ஐசிசியின் அடுத்த டெஸ்ட் யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா…, அட்டவணை குறித்த முழு விவரம் உள்ளே!!

அப்போது தனம் முல்லைக்கு ஒன்னும் இல்லனு சொன்ன மட்டும் தான் நான் வீட்டுக்கு வருவேன் என கோவிலில் சத்தியம் செய்கிறார். அடுத்ததாக ஹாஸ்பிட்டலுக்கு வரும் முல்லையின் அப்பா, அம்மாவிடம் முல்லைக்கு எதுவும் ஆகாது என சொல்லி ஆறுதல் கூறுகிறார். அப்போது பார்வதி ஆத்திரத்தில் உங்க வீட்டு ராசி தான் என்னோட பொண்ணு இப்படி ஆனதுக்கு காரணம் என மூர்த்தியை திட்டுகிறார். இதுக்கு மூர்த்தி எதுவும் பேச முடியாமல் அவமானத்தில் தலைகுனிகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here