இந்தியாவை கண்டு நடுங்கிய பாகிஸ்தான் – அபி நந்தன் விடுவிப்பு பின்னணி!!

0

பாகிஸ்தானுக்குள் நுழைந்து கடந்த ஆண்டு வீர தீரமாக சண்டையிட்டார் தமிழகத்தின் அபி நந்தன். இவர் கைதான போதும், இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்தே, இவரை பாகிஸ்தான் விடுவித்துள்ளது. இதை அந்நாட்டு எம்.பி. சாதிக் உறுதி படுத்தி உள்ளார்.

பாகிஸ்தான் அச்சம்

தமிழகத்தை சேர்த்த அபி நந்தன், இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக உள்ளார். கடந்த ஆண்டு (2019) பிப்ரவரியில், பாகிஸ்தானுக்குள் சென்று இந்திய விமானப்படைகள் தாக்கின. இதில் மிக்-21 ரக விமானத்தை இயக்கிய அபி நந்தன், பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.

ஆனால் இவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. இந்தியாவின் நெருக்கடி காரணமாக இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு, அபி நந்தனை விடுவித்தது. இதன் பின்னணி தற்போது வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் பார்லிமென்ட்டில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- என் கட்சி தலைவர் மற்றும் எம்.பி.அயஸ் சாதிக் கூறுகையில்,’ இந்திய விமானப்படை விங் கமாண்டரான அபி நந்தனை விடுவிப்பது குறித்து கடந்த ஆண்டு பேச்சு வார்த்தை நடந்தது. இக்கூட்டத்தை பிரதமர் இம்ரான் கான் புறக்கணித்து விட்டார். பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி பாஜ்வா கலந்து கொண்டார். இதில், அபி நந்தனை விடுதலை செய்ய வில்லை எனில் இரவு 9 மணிக்கு நமது நாட்டின் மீது இந்தியா போர் தொடுக்கும் என, வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரோஷி தெரிவித்தார். இதை கேட்ட பாஜ்வாவுக்கு வியர்த்து கொட்டியது. கால்கள் நடுங்கின. இதன் பின், அச்சம் காரணமாக அபி நந்தன் விடுவிக்கப் பட்டார்,’ என்றார்.

இது, பாகிஸ்தானின் தான்யா செய்தி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here