சென்னை மக்களே ஹாப்பி நியூஸ்…, இந்த பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்…, ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

0
சென்னை மக்களே ஹாப்பி நியூஸ்..., இந்த பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்..., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
சென்னை மக்களே ஹாப்பி நியூஸ்..., இந்த பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்..., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

இந்தியாவின் தென் தமிழகம் மற்றும் கேரளா மாநிலம் இணைந்து கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் ஆகும். இந்த ஓணம் பண்டிகையானது வருடந்தோறும் ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இதன்படி, வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இந்த வருடம் கொண்டாடப்பட உள்ளது. இதனால், திருப்பூர் வழியாக சென்னை-எர்ணாகுளத்துக்கு ஓணம் சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை வியாழக்கிழமை தோறும் தாம்பரம் முதல் எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் (எண்:06053) இயக்கப்படும். தாம்பரத்தில் மதியம் 3 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 3:30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். பின் மீண்டும், எர்ணாகுளத்தில் இருந்து ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங்கள் வழியாக சென்னை எழும்பூரை வந்தடையும். மேலும், ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் காலை 8:30மணிக்கு மறுமார்க்கமாக எர்ணாகுளத்தில் இருந்து ரயில் (எண்: 06504) புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 11.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வலுவிழந்த முடி அடர்த்தியா வளரணுமா? இந்த ஹேர் பேக்கை மட்டும் பாலோவ் பண்ணுங்க., செம்ம ரிசல்ட் கிடைக்கும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here