உலக கோப்பை 2023: தொடரை விட்டு வெளியேறிய ஆப்கானிஸ்தான்..., தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போராட்டம் வீண்!!
இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே அரையிறுதி சுற்றை எதிர்நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது அனைத்து அணிகளும் உலகக் கோப்பைக்கான கடைசி லீக் போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில், ஆப்கானிஸ்தான் அணியானது அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்து கொள்ளும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து மோதியது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 47.3 ஓவரிலேயே 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 8 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறியது. தென் ஆப்பிரிக்க அணியோ 14 புள்ளிகளுடன் 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஏற்கனவே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.