விராட் கோலியை டீமில் சேர்க்க முடியாது இவரை தான் சேர்ப்பேன் – தோனி திட்டவட்டம்..!

0

விராட் கோலியை இந்திய அணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என அப்போதைய கேப்டன் தோனி தேர்வுக் குழுவிடம் திட்டவட்டமாக கூறினார் என முன்னாள் தேர்வுக் குழு தலைவரான திலிப் வெங்க்சர்க்கார் கூறியுள்ளார்.

திலிப் வெங்க்சர்க்கார் முடிவு..!

2008இல் இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு அண்டர் 23 அணியில் இருந்து சில இளம் வீரர்களை அணியில் சேர்க்க முடிவு செய்தது. அந்த சமயத்தில் தான் அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இளம் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. அந்த அண்டர் 19 அணியின் கேப்டன் விராட் கோலி, சிறப்பாக பேட்டிங் ஆடி பெயர் பெற்று இருந்தார். அதனால், கோலியை இந்திய அணியில் சேர்க்க முடிவு செய்தார் திலிப் வெங்க்சர்க்கார்.

காரணம்..!

விராட் கோலி அப்போதே பேட்டிங் அடிப்படைகளில் சிறந்து விளங்கினார். கேப்டனாகவும் செயல்பட்டு வெற்றி தேடிக் கொடுத்து இருந்தார். இந்தியா அடுத்து இலங்கை அணிக்கு எதிராக ஆட இருந்ததால் கோலியை இந்த நேரத்தில் சர்வதேச போட்டிகளில் களமிறக்கலாம் என வெங்க்சர்க்கார் கருதியே அவரை தேர்வு செய்ய முயன்றார்.

தோனி மறுப்பு..!

ஆனால், கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் விராட் கோலியை அணியில் சேர்த்துக் கொள்ள மறுத்துள்ளனர். அதற்கு காரணமாக, தாங்கள் அவரது பேட்டிங்கை பார்த்ததே இல்லை என்று கூறியுள்ளார்.

பதில் அளித்த திலிப் வெங்க்சர்க்கார், “நீங்கள் அவரை பார்த்ததில்லை. ஆனால், நான் அவரை பார்த்து இருக்கிறேன். நாம் இந்த பையனை நிச்சயம் அணியில் தேர்வு செய்ய வேண்டும்” என கூறி சமாதானம் செய்து உள்ளார். இந்த முடிவை பலரும் அப்போது எதிர்த்து உள்ளனர்.

சுப்பிரமணியம் பத்ரிநாத்கு வாய்ப்பு..!

அப்போதைய பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மற்றும் கேப்டன் தோனி, விராட் கோலியை அணியில் தேர்வு செய்வதை விரும்பவில்லை. தமிழக கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத்தை அணியில் தேர்வு செய்ய விரும்பி இருக்கிறார்கள்.

அப்போது சுப்பிரமணியம் பத்ரிநாத் உள்ளூர் தொடரில் சிறப்பாக ஆடி நல்ல பார்மில் இருந்தார். அதனால், கோலியை தேர்வு செய்வதை கண்ட பத்ரிநாத்துக்கு தான் வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறி உள்ளார். இந்த தகவல்களை திலிப் வெங்க்சர்க்கார் இப்போது வெளியிட்டு இருக்கிறார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here