போர்க்கால அடிப்படையில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!!!

0

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் நேமம் கிராமத்தில் உள்ள  கொரோனா தடுப்பூசி மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியர்களுக்கு அளித்த பேட்டியில் முழு ஊரடங்கால் பல நகரங்களில் தொற்று குறைந்துள்ளதாகவும், தேவைப்பட்டால் முழு ஊரடங்கை நீடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம், தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மற்றும் தடுப்பூசி மையங்களை ஆய்வு செய்தேன். மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும். மேலும் போர்க்கால அடிப்படையில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டு, நேரடியாக தடுப்பூசி வாங்க உள்ளோம். இன்னும் சில மாதங்களில் தமிழகத்திற்கு தடுப்பூசி வாங்கப்படும். தடுப்பூசி செலுத்துவதை மக்கள் இயக்கமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்லை.கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 2.84 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2 வாரத்தில் தடுப்பூசி வீணாகுவது 1% குறைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள ஊரடங்கு நன்கு பலன் அளித்துள்ளதால், இனி வரும் காலத்தில் தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும் தேவையின்றி மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here