நடிகை மீரா மிதுன் மீது நட்சத்திர ஹோட்டல் மேனேஜரை திட்டியதாக மற்றொரு வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!!

0

பிக்பாஸ் புகழ் நடிகை மீரா மிதுன் மீது நட்சத்திர ஹோட்டல் மேனேஜரை திட்டியதாக குற்றப்பத்திரிகை ஒன்று தற்போது புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு வழக்கு:

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மக்கள் விருப்ப நிகழ்வான பிக்பாஸ்- 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை மீரா மிதுன்.  இதனை அடுத்து வெள்ளித்திரையில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்து வந்தார்.  இந்நிலையில், இவருக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லை என்ற அளவில் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு இவர் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும், அந்த குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்த  திரைப்பட இயக்குனர்கள், நடிகர், நடிகைகளை பற்றி இழிவான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.  இதனை அடுத்து,கடந்த 7ம் தேதி நடிகை மீரா மிதுன் பற்றி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரின் அடிப்படையில்  எஸ்.சி., – எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்த வழக்கே முடியாத நிலையில், நட்சத்திர ஹோட்டலின் மேனேஜரை இழிவுபடுத்தி பேசியது என்ற மற்றொரு வழக்கு இவர் மீது சென்னை எழும்பூர் காவல் நிலைய போலீசாரால் பதியப்பட்டுள்ளது.  மேலும், இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கையாக குற்ற பத்திரிகையையும் காவல் துறையின் சார்பாக நீதிமன்றத்தில்   தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here