நீங்களாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும் – தமிழ்நாடு, கர்நாடகாவிற்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அமைச்சர்!!

0

கடந்த சில நாட்களாகவே கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கேரளத்தின் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனசுக் மாண்ட்வியா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் அலை பரவல் வேகமெடுத்தது. பின்னர் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் குறைந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலையின் அறிகுறிகளாக இருக்குமோ என்று மக்கள் அஞ்சி வருகின்றனர்.

இன்றைய கொரோனா நிலவரம் - ஒரே நாளில் 30,941 பேர் பாதிப்பு.. 350 உயிரிழப்பு!!

இந்தியாவில் குறிப்பாக கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே மத்திய அரசு பல ஆலோசனைகளை அந்தந்த மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் கேரளாவில் விடப்பட்ட ஓணம் பண்டிகை விடுமுறையால் இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மன்சுக் மாண்டவியா கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால் தமிழகம்,  கர்நாடக மாநிலங்களும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here