விரைவில் தயாராகும் மாயாண்டி குடும்பத்தார் 2 ?? இயக்குனர் யாருன்னு தெரியுமா??

0
விரைவில் தயாராகும் மாயாண்டி குடும்பத்தார் 2 ?? இயக்குனர் யாருன்னு தெரியுமா??

இயக்குனர் ராசு மதுரவன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாயாண்டி குடும்பத்தார்’.  அப்பா பாசம், சகோதரர்கள் பாசம் மற்றும் குடும்ப பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகர் சீமான் மற்றும் மணிவண்ணன் பூங்கொடி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்புகளை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இந்தத் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் தயாராகிறது. முதல் பாகத்தில் நடித்த சீமான் உள்ளிட்டோர் இதிலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்தை இயக்கிய ராசு மதுரவன் காலமான நிலையில் 2ம் பாகத்தை புதிய கீதை, ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கிய K.P. ஜெகன் இயக்குகிறார். வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

திருமணமான 2 மாதத்தில் அமலாபால் கர்ப்பம்., வைரலாகும் போட்டோ ஷூட் பிக்குகள்., குவியும் வாழ்த்து மழை!!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here