தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா J. N. வைரஸ்., பொதுமக்களுக்கு புதிய கட்டுப்பாடு., சுகாதார துறை அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா J. N. வைரஸ்.
தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் பொதுமக்கள் வெள்ளத்தில் தவித்து வந்தனர். இதையடுத்து வெள்ள நீர் வடிந்து வந்த நிலையில் மக்களுக்கு வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காலரா, சேற்றுப்புண் டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் காய்ச்சல் உள்ளிட்ட  தொற்றால் பாதிப்பு அடைவதை தடுப்பதற்காக தமிழக அரசு சார்பில் 3500 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில்  உருமாறிய கொரோனா ஜே என் 1 வைரஸ் தற்போது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் இதுவரை ஜி என். 1 கொரோனா வைரஸ் 20 பேரை தாக்கியுள்ளதாக சுகாதாரத் துறை  தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சம் பட அவசியம் இல்லை. மேலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் முக கவசம், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், பொது இடங்களில் இடைவெளியை கடைபிடிப்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here