மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 10,000 ஆக உயர்வு – பொதுமக்கள் பயங்கர அதிர்ச்சி!!

0

நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில், ஒரே நாளில் 10,292க்கும் அதிகமான நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பாதிப்பு உயர்வு :

இந்தியாவின் பல மாநிலங்களில், கொரோனா தொற்று மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹரியானா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த வகையில், நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில், ஒரே நாளில் மட்டும் 10,292 க்கும் அதிகமான நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 9,386 பேர் தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மேலும். புதிதாக 10 நபர்களுக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கர்நாடகாவில் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தற்போது தொற்று அதிகரித்துள்ளதால், கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here