நடிகர் ஜெயம்ரவியின் ‘அகிலன்’…,அடுத்த மாதம் ரிலீஸ்…,

0
நடிகர் ஜெயம்ரவியின் 'அகிலன்'...,அடுத்த மாதம் ரிலீஸ்...,
நடிகர் ஜெயம்ரவியின் 'அகிலன்'...,அடுத்த மாதம் ரிலீஸ்...,

நடிகர் ஜெயம்ரவி மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘அகிலன்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகிலன் திரைப்படம்

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம்ரவி. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயம்ரவி, தமிழில் ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரைப் பயணத்தை தொடர்ந்தார். தொடர்ந்து, இவர் நடித்த தாஸ், ஜெயம், எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்கள் இவருக்கு தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுத் தந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

குறிப்பாக, நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இவரது சினிமா கரியருக்கு முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பல்வேறு மொழிகளைத் தாண்டி ஜெயம்ரவியின் நடிப்பு அதிகளவு பேசப்பட்டது இந்த திரைப்படத்தில் தான். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம்ரவி ‘அகிலன்’ மற்றும் ‘சைரன்’ என்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

அரசு வேலை வேண்டுமா?…, எளிமையா படிக்கலாம் வாங்க…,அறிமுகமாகும் புதிய செயலி!!!

இதில், ‘அகிலன்’ திரைப்படம் மார்ச் மாதம் 10 ஆம் தேதியன்று திரையரங்குகளுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவியுடன், நடிகை ப்ரியா பவானி ஷங்கர், தான்யா உட்பட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக, இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கடற்கரையில் நடைபெறும் கடத்தல் கும்பலின் தலைவராக நடித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here