இன்டர்நெட் இல்லாமல் ஈஸியா ‘Money Transaction’ செய்யலாம் – வந்துருச்சு லாவா பே (Lava Pay)..!

0

இந்த காலத்தில் அனைத்துமே மொபைல் போனில் வந்து விட்டது. எனவே எது தேவை என்றாலும் வெகு தூரம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை மற்றும் பணத்தேவைக்கும் பேங்கிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்டர்நெட்டிலேயே அனைத்தும் சாத்தியமாகி விட்டது. அதையும் தாண்டி இப்பொழுது இன்டர்நெட் இல்லாமலே பண பரிமாற்றம் செய்ய லாவா பே சேவை அறிமுகமாகி உள்ளது.

லாவா பே சேவை

இந்த சேவையை மொபைல் போன் உற்பத்தியாளரான லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி லாவா ஃபீச்சர் போன் மாடல்களில் பிரீ இன்ஸ்டால் செய்யப்படும் என லாவா தெரிவித்து இருக்கிறது. இதுதவிர ஏற்கனவே மொபைல் போன் பயன்படுத்துவோர், அருகாமையில் உள்ள லாவா சர்வீஸ் சென்டர்களுக்கு சென்று புதிய செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.

பயன்படுத்துவது எப்படி..?

மிக எளிமையான யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கும் லாவா பே செயலியில் பயனர்கள் பணம் அனுப்ப வேண்டியவரின் மொபைல் போன் நம்பர், அனுப்ப வேண்டிய தொகை மற்றும் யு.பி.ஐ. பின் அல்லது டிரான்சாக்ஷன் குறியீட்டை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், பணம் அனுப்பியவர் மற்றும் பெறுவோருக்கு நோட்டிஃபிகேஷன்கள் அனுப்பப்பட்டு விடும். மேலும் தங்களின் வங்கியில் உள்ள பண விவரங்களை கூட தெரிந்து கொள்ளலாம்.

Lava Pay பயன்கள்:

இதனை அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையான முறையில் வடிவமைத்து உள்ளனர். எனவே சாதாரண மக்களும் இதனை பயன்படுத்தலாம். மேலும் நாம் வெளியூர்களுக்கு செல்லும்போது இன்டர்நெட் சரியாக கிடைப்பதில்லை. இதனால் அவசர காலத்தில் கூட பணமாற்றம் செய்வது கடினமானதாக உள்ளது. அந்த வகையில் இது மக்களுக்கு உதவியாக இருக்கும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here