கொரோனா நோயாளிகள் இனி வீட்டு தனிமையில் இருக்க அனுமதி இல்லை!!!

0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் அல்லது அறிகுறியற்றவர்கள் தங்களாவே வீட்டு தனிமையில் இருக்க அனுமதி இல்லை என மகாராஷ்டிரா பிம்ப்ரி சின்ச்வாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்போது நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் பலர் டாக்டர்களின் ஆலோசனைப்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கம் முதல், நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் இடையே தேசிய தொலை மருத்துவ சேவை, குறுகிய காலத்தில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே பலர் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற விரும்பினர்.

மேலும் வீட்டு தனிமையில் உள்ள கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு மாணவர்களை பணியமர்த்துவது போன்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த ஒரு சில மாநிலங்கள் முயற்சித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாத் மாநகராட்சி தலைவர் லேசான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அல்லது நோய்த்தொற்று அறிகுறியற்றவர்கள் இனி வீட்டு தனிமையில் இருக்க அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.

வீட்டு தனிமையால், அந்த வீட்டில் உள்ள அனைவர்க்கும் நோய் பரவும் அபாயம் இருப்பதாலும் மேலும் நோயாளியின் குடும்ப உறுப்பினர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்க இவ்வாறாக உத்தரவிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here