முதன் முதலாக இலங்கைக்கு பறக்கும் நடிகை ரம்பா.., எதுக்காக தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!

0
முதன் முதலாக இலங்கைக்கு பறக்கும் நடிகை ரம்பா.
இன்றைய காலகட்டத்தில் முன்னணி பாடகர்கள் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட ஏ.யார். ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சையை கிளம்பியது என்பது எல்லாருக்கும் தெரியும். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகராக இருந்து வரும்  ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 21ம் தேதி யாழ்ப்பாணம் முத்தவெளி அரங்கில் நடைபெற இருக்கிறது.
இந்த இசை நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். SLIIT Northern UNI நடத்தும் இந்த நிகழ்ச்சியில் பிரபல முன்னாள் நடிகை தான் சிறப்பு விருந்தினராக வர போகிறாராம். அது வேற யாரும் இல்லை, நம்ம நடிகை ரம்பா தான் வரப் போகிறாராம். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் முதல் முதலாக இலங்கைக்கு இந்த நிகழ்ச்சிக்காக வருகிறாராம். மேலும் இந்த நிகழ்ச்சியை நடத்துவது நடிகை ரம்பாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here