மக்களே.., ஆதார் கார்டை அப்டேட் பண்ணலையா? அப்ப.., இதை வேகமாக செய்யுங்கள்!!

0
மக்களே.., ஆதார் கார்டை அப்டேட் பண்ணலையா? அப்ப.., இதை வேகமாக செய்யுங்கள்!!
மக்களே.., ஆதார் கார்டை அப்டேட் பண்ணலையா? அப்ப.., இதை வேகமாக செய்யுங்கள்!!
மத்திய மற்றும் மாநில அரசானது, பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருவதை நாம் அறிவோம். இந்த நலத்திட்டங்களை மக்கள் முழுமையாக பெற வேண்டுமானால், இந்திய குடிமகன் என்பதற்கான அரசால் வழங்கப்பட்ட ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் ஆன்லைன் மூலம் ஆதார் கார்டை எப்படி புதுப்பிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
  • முதலில் ஆதார் இணையதளத்திற்கு சென்று உங்கள் ஆதார் நம்பரை பதிய வேண்டும். அதன் பின்னர் உங்கள் மொபைல் போனுக்கு வரும் OTP நம்பரை பதிவு செய்து உள்ளே செல்ல வேண்டும்.
  • இதையடுத்து ஒரு ஸ்கிரீன் தெரியும்,அதில் பெயர்/பாலினம்/பிறந்த தேதி மற்றும் முகவரி புதுப்பிப்பை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் அப்டேட் ஆதார் ஆன்லைன் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

டி20 உலக கோப்பை 2024: பரிசுத் தொகையை அறிவித்த ஐசிசி.. முழு விவரம் உள்ளே!!

  • இதனை தொடர்ந்து முகவரி விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, அதன் பின்னர் ஆதாரை புதுப்பிக்க தொடரவும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து முகவரியைப் புதுப்பிக்க உங்கள் ஆவணத்தைப் பதிவேற்றவும்.
  • இதற்குப் பிறகு SRN உருவாக்கப்படும். அதன் உதவியுடன் உங்கள் விண்ணப்பத்தை டிராக் செய்து புதுப்பித்து கொள்ளலாம்.
  • ஆனால் உங்களுடைய கருவிழி, புகைப்படம் அல்லது பிற பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்றால், அதற்கு ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று அதற்கான கட்டணத்தை செலுத்தி மட்டுமே புதுப்பிக்க முடியும்.
  • மேலும் ஆதார் அட்டையை ஜூன் 14 வரை ஆன்லைனில் நீங்கள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here