Home செய்திகள் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் – அக்.20ம் தேதியே சம்பளம் வழங்க முடிவு! அரசு அறிவிப்பு!!

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் – அக்.20ம் தேதியே சம்பளம் வழங்க முடிவு! அரசு அறிவிப்பு!!

0
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் – அக்.20ம் தேதியே சம்பளம் வழங்க முடிவு! அரசு அறிவிப்பு!!
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் - அக்.20ம் தேதியே சம்பளம் வழங்க முடிவு! அரசு அறிவிப்பு!!

அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த செலவுகளுக்காக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு திட்டம் :

பெரும்பாலான மக்களால் அதிகம் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ளது. இந்தப் பண்டிகைக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள், ஊழியர்களுக்கு தொடர்ந்து பல கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அகவிலைப்படி ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் மற்றும் விடுமுறை குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில், இந்த தீபாவளி பண்டிகைக்கு பலரும் கடைவீதிக்குச் சென்ற பொருட்களை வாங்க விரும்புவர். இதனை கருத்தில் கொண்டு பீகார் மாநில அரசு ஊழியர்களுக்கு, இந்த மாதத்திற்கான சம்பளத்தை மட்டும் முன்கூட்டியே வழங்க மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. பீகாரில் இன்னும் ஒரு வாரத்திற்குள் சாத் மற்றும் தீபாவளி பண்டிகை வர உள்ளதால், முதல்வர் நிதிஷ்குமார் உடன் ஆலோசனை நடத்தி, ஊதியத்தை முன்கூட்டியே வழங்க திட்டமிட்டுள்ளதாக மாநில நிதி அமைச்சர் விஜயகுமார் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்(18.10.2022) அடக்கடவுளே..,  மறுபடியும் கிராமுக்கு இவளோ கூடிருச்சா??

வருகிற அக்டோபர் 20ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் இந்த மாதத்திற்கான சம்பளம் வழங்கும் பணிகள் தொடங்கும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளதால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here