T20 WC யில் 4 அணிகள் அரையிறுதி வரை செல்லும்…, இறுதியில் இந்த அணி தான் வெல்லும்…, சச்சின் ஓபன் டாக் !!

0
T20 WC யில் 4 அணிகள் அரையிறுதி வரை செல்லும்..., இறுதியில் இந்த அணி தான் வெல்லும்..., சச்சின் ஓபன் டாக் !!
T20 WC யில் 4 அணிகள் அரையிறுதி வரை செல்லும்..., இறுதியில் இந்த அணி தான் வெல்லும்..., சச்சின் ஓபன் டாக் !!

டி20 உலக கோப்பையில் இந்த அணி தான் அனைத்து துறையிலும் சிறப்பாக உள்ளது. எனவே, இந்த அணியே உலக கோப்பையை வெல்லும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்:

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுக்கு ஏற்கனவே 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகளே தேர்வு செய்வதற்காக தகுதி சுற்றுகள் கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்றுகள் முடிந்தவுடன் வரும் 22ம் தேதி முதல் சூப்பர் 12 சுற்றுகள் நடைபெற உள்ளது. சூப்பர் 12 சுற்றில் இடம் பிடிப்பதற்காக இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா உள்ளிட்ட 8 அணிகளுக்கிடையே விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில், டி20 உலக கோப்பையை இந்த அணி தான் வெல்லும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மற்ற அணிகளின் பலம், பலவீனத்தை வைத்து குறிப்பிட்டு கூறியுள்ளார். அதில், இந்தியா முதலில் எதிர்கொள்ள இருக்கும் பாகிஸ்தான் குறித்து பேசிய அவர், இந்த போட்டியில் இந்தியா தான் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். நான் இந்தியன் என்பதற்காக கூறவில்லை, ஆஸ்திரேலிய களங்களில் இந்தியா எப்போதும் அற்புதமாக தான் செயல்படும். அதனால் தான், அவ்வாறு கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

அட என்ன ஒரு கேட்ச்…, பீல்டிங்கில் துவம்சம் செய்த விராட் கோஹ்லி!!மிரண்டு போன ரசிகர்கள்

மேலும், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதி வரை செல்லும். ஆனாலும், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மற்ற அணிகளுக்கு சவால் விடும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, இந்தியாவை பொறுத்தவரை, தற்போது பேட்டிங், பவுலிங் மற்றும் பில்டிங் என அனைத்திலும் சிறப்பாக உள்ளது. இதனால் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என அடிக்கடி என்னுள் தோன்றுகிறது என சச்சின் வெளிப்படையாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here