முதல் இடத்தை அடைந்த அர்ஜென்டினா…, சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா முன்னிலை!!

0
முதல் இடத்தை அடைந்த அர்ஜென்டினா..., சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா முன்னிலை!!
முதல் இடத்தை அடைந்த அர்ஜென்டினா..., சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா முன்னிலை!!

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட தரவரிசையில், அர்ஜென்டினா முதலிடத்தை எட்டியதுடன், இந்திய அணியும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

FIFA:

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA), சிறந்தும் விளங்கும் கால்பந்து அணிகளுக்கு ஏற்ப தரவரிசையை புதுப்பித்து உள்ளது. இந்த வகையில், கத்தாரில் நடைபெற்ற FIFA உலக கோப்பையை தொடரை வென்ற அர்ஜென்டினா அணி, சமீபத்தில் நட்பு ரீதியிலான தொடரை பனாமா மற்றும் குராசோ அணிகளுக்கு எதிராக 9 கோல்களை அடித்து அசத்தி இருந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன் மூலம், அர்ஜென்டினா அணி 1840.93 புள்ளிகளுடன் முதலிடத்தை எட்டி உள்ளது. இந்த தரவரிசையில், பிரான்ஸ் 1838.45, பிரேசில் 1834.21, பெல்ஜியம் 1792.53, இங்கிலாந்து 1792.43 புள்ளிகளுடன் டாப் 5 இடத்தை பிடித்துள்ளனர். இந்த அணிகளை தொடர்ந்து, நெதர்லாந்து 1731.23, குரோஷியா 1730.02, இத்தாலி 1713.66, போர்ச்சுகல் 1707.22 மற்றும் ஸ்பெயின் 1682.85 புள்ளிகளுடன் அடுத்த 5 இடங்களை பிடித்துள்ளனர்.

ரஷ்மிகா மந்தனாவை காதலிக்கும் அல்லு அர்ஜுன்.., ஆதாரத்துடன் வெளிவந்த உண்மை!!

இந்த தரவரிசையில், இந்திய கால்பந்து அணியும் முன்னிலை பெற்றுள்ளது. அதாவது, சமீபத்தில் மியன்மார் மற்றும் கிர்கிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடந்த முத்தரப்பு தொடரை இந்திய அணி வென்றதன் மூலம், 5 இடங்கள் முன்னேறி 101 வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி டாப் 100 இடத்தை பெற இன்னும் ஒரு படியை உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here