அம்பலமாகும் காவியாவின் கர்ப்பம்.., ஜீவாவை வைத்து சந்தேகிக்கும் பார்த்திபன்.., ஈரமான ரோஜாவே 2 ட்விஸ்ட்!!

0
அப்போ கர்ப்பம் கலைஞ்சிடுச்சா.., உண்மை தெரிந்து நொறுங்கி போகும் பார்த்திபன்.., காவியாவின் நிலை என்ன??
அப்போ கர்ப்பம் கலைஞ்சிடுச்சா.., உண்மை தெரிந்து நொறுங்கி போகும் பார்த்திபன்.., காவியாவின் நிலை என்ன??

ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது காவியா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அதனை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்துள்ளார். பார்த்திபன் தன்னை எப்பொழுது ஏற்றுக்கொள்கிறாரோ அப்பொழுது தான் உண்மையை சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். இப்படி இருக்க இப்பொழுது இந்த விஷயம் ஜீவாவிற்கு தெரிய வருகிறது.

சந்தோசத்தின் உச்சத்திற்கு செல்லும் ஜீவா காவியாவிடம் கேட்கிறார். அப்பொழுது காவியா நடந்த உண்மைகளை சொல்கிறார். பார்த்தியும் நானும் சந்தோசமாக வாழவில்லை என்று சொல்கிறார். இதனால் ஜீவா இடிந்து போகிறார். எல்லாருடைய சந்தோஷமும் இப்படி இடிஞ்சு விழுந்துடுச்சே என்று நொந்து போகிறார்.

இப்படி இருக்க இப்பொழுது காவியா கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரியும் சூழ்நிலை வந்து விட்டது. அதாவது தேவிக்கு இந்த விஷயம் தெரிந்து விட உடனே பார்த்தியிடம் போய் சொல்கிறார். காவியா இந்த விஷயத்தை என்கிட்டே மறைக்க மாட்டா என்று சொல்ல அதற்கு தேவி உன்கிட்ட சொல்லல, ஆனா ஜீவா கிட்ட சொல்லிட்டா என்று போட்டு விடுகிறார். பார்த்தி கோவமாக சென்று காவியாவிடம் கேட்கிறார். காவியா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லி விடுகிறார். மேலும் இந்த விஷயத்தை எதற்கு என்கிட்ட சொல்லாமல் ஜீவா கிட்ட சொல்ற என்று கேட்கிறார். காவியா எதுவும் சொல்ல முடியாமல் திணறி போய் நிற்கிறார். இதன் பிறகு பார்த்திபன் ஏற்றுக்கொள்வாரா?? இல்லை ட்ராக் பாரதி கண்ணம்மா போல மாறுமா?? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here