பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி வாரத்திற்கு ஒரு முறை இந்த சலுகையும் உண்டு.., வெளியான அறிவிப்பு!!

0
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி வாரத்திற்கு ஒரு முறை இந்த சலுகையும் உண்டு.., வெளியான அறிவிப்பு!!
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி வாரத்திற்கு ஒரு முறை இந்த சலுகையும் உண்டு.., வெளியான அறிவிப்பு!!

கோடை வெயிலுக்கு பிறகு தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் இயங்கி வருகிறது. இந்த நேரத்தில் மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி சமீபத்தில் கூட தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்க நோ பேக் டே என்ற திட்டம் வாரத்தில் ஒரு நாள் செயல்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை தொடர்ந்து புதுச்சேரியிலும் மாதத்திற்கு ஒரு முறை மாணவர்கள் பள்ளிக்கு புத்தக பை இல்லாமல் வரலாம் என கூறியிருந்தனர். இந்நிலையில் கர்நாடக அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. இதில் மாணவர்களின் ஸ்கூல் பேக் எடை குறைந்த பட்சம் அவர்களது உடல் எடையில் 15 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது.

தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கை !!!

மேலும் வாரத்திற்கு ஒரு முறை சனிக்கிழமைகளில் நோ பேக் டே திட்டத்தை செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நோ பேட் டே தினங்களில் மாணவர்களுக்கு விளையாட்டு, கை வேலை, கலை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் இது அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அம்மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here