தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா..!எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய அறிவுரை!!!

0

தமிழ் நாட்டில் நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்தாலே கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மேலும் முதல் அலை போல் அல்லாமல் இரண்டாம் அலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மோசமான கட்டத்திற்குச் செல்வது மிக விரைவாக நடக்கிறது.

இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொழிற்சாலைகளின் ஆக்சிஜன் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. மருந்து நிறுவனங்கள், அணுமின் நிறுவனங்கள் உள்ளிட்ட ஒன்பது துறைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் தர வேண்டும் என கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது. மேலும் தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை என்று, தமிழக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தினசரி பாதிப்பு 35,000 ஆக அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் தினசரி அதிகபட்ச பாதிப்பு 6,000 க்குள் தான் இருந்தது. தமிழ்நாட்டில் நிலவி வரும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்தால் போதும் இறப்பு விகிதத்தை குறைக்கலாம் என கூறியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here