கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்த இந்திய மருத்துவர்கள் – எண்ணிக்கையை கேட்டா அதிர்ந்து போவீங்க!!!

0
கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்த இந்திய மருத்துவர்கள் - எண்ணிக்கையை கேட்டா அதிர்ந்து போவீங்க!!!
கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்த இந்திய மருத்துவர்கள் - எண்ணிக்கையை கேட்டா அதிர்ந்து போவீங்க!!!

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை 269 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் அதிகப்படியாக பீகார் மாநிலத்தில் 78 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ரெம்டெசிவிர் மருந்து பெற இணையதளம் துவக்கம்

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. அன்றாடம் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இறப்போர் எண்ணிக்கை 4000க்கு குறையாமல் உள்ளதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையும் வரும் என்கிறார்கள்.இந்த சூழ்நிலையில் நாட்டு மக்களுக்காக, கொரோனா முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் இரவும் பகலும் பாராமல் உழைத்து வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

 இரண்டாம் அலையில் உயிரிழந்த இந்திய மருத்துவர்கள்
இரண்டாம் அலையில் உயிரிழந்த இந்திய மருத்துவர்கள்

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் பல முன்களப்பணியாளர்கள் இறந்தும் உள்ளனர். மத்திய மாநில அரசும் இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல முயற்சிகளை செய்து வருகிறது.இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம், கொரோனா இரண்டாம் அலையால் தற்போது வரை உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவின் இரண்டாம் அலையில் தமிழகத்தில் 11 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here