பணிப்பெண் சித்திரவதை வழக்கு.,  MLA மகன்-மருமகள் சரணடைய முடிவு., முன்ஜாமீன் குறித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு!!!

0
பணிப்பெண் சித்திரவதை வழக்கு.,  MLA மகன்-மருமகள் சரணடைய முடிவு., முன்ஜாமீன் குறித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு!!!
திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் தன் வீட்டில் வேலை பார்த்த பணி பெண்ணை அடித்து  உடம்பில் சூடு போட்டு பல சித்தரவதை செய்தித்துள்ளனர்.மேலும் இந்த உண்மையை வெளியே சொல்ல கூடாது என பணி பெண்ணை மிரட்டியுள்ளனர். ஆனால் இந்த சம்பவம் வெட்டவெளிச்சமான நிலையில், போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து எம்.எல்.ஏவின் மகன் – மருமகள் தலைமறைவான நிலையில் அவர்களை விரைவில் கண்டுபிடிக்கும்படி 3 தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தாங்களே போலீசில் ஆஜராவதாகவும், ஆனால் சரணடையும் நாளிலேயே  முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும்  நீதிமன்றத்தில் தம்பதிகள் மனு கொடுத்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சரணடையும் பட்சத்தில் முன்ஜாமீன் வழங்க பரிசீலிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இப்படி இருக்க தாங்கள் பணிப்பெண்ணை நலமாக பார்த்துக் கொண்டதாகவும், அதற்கு ஆதாரமாக சில வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். இதற்கு பாதிக்கப்பட்ட பெண் கூறியிருப்பதாவது, அவர்கள் அடித்து கொடுமை படுத்தியது உண்மைதான். அவர்கள் செய்த கொடுமையை மறைப்பதற்காகவே இப்படி என்னை மகிழ்ச்சியாக வைத்திருந்தது போன்ற வீடியோக்களை வெளியிட்டுள்ளார்கள் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here