Home செய்திகள் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு ஷாக் – கடைசி நேரத்தில் கால்லை வாரிவிட்ட நிர்வாகம்!!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு ஷாக் – கடைசி நேரத்தில் கால்லை வாரிவிட்ட நிர்வாகம்!!

0
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு ஷாக் – கடைசி நேரத்தில் கால்லை வாரிவிட்ட நிர்வாகம்!!
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு ஷாக் - கடைசி நேரத்தில் கால்லை வாரிவிட்ட நிர்வாகம்!!

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகளுக்கு ஷாக் அளிக்கும் விதமாக ஆம்னி பேருந்துகளின் செயல்பாடு அமைந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆம்னி பேருந்து:

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கமான நிகழ்வு தான். இந்த வகையில் நடப்பு வருடம் தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி அன்று வருகிறது. இதையொட்டி நாளை முதல் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய பலரும் திட்டமிட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, பயணிகள் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் 23ம் தேதி வரை 3 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும் பயணிகள் பலரும் தனியார் ஆம்னி பேருந்துகளில் சௌகரியமாக செல்ல திட்டமிடுகிறார்கள். தீபாவளி பண்டிகைக் காலத்தை ஒட்டி, தனியார் ஆம்னி பேருந்துகள் 2 முதல் 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக ஒவ்வொரு ஆண்டும் பயணிகளால் புகார்கள் எழுப்பப்படுகிறது. மேலும் நடப்பு வருடம், சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1000 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ள நிலையில், 22, 23ம் தேதிகளில் அனைத்து பஸ்களிலும் இருக்கைகள் நிரம்பி விட்டதாகவும், (நாளை) 21ம் தேதி சில பஸ்களில் மட்டும் ஒரு சில இருக்கைகள் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகிறது.

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள் அமல் – தடை விதித்து காவல் துறை உத்தரவு!!

இந்நிலையில் நடப்பு வருடமும், தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு செல்ல ரூ.3000 – 3500 கட்டணம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.எனவே, அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here