பாகிஸ்தானுக்கு எதிரான பிளேயிங் லெவனில் இவர் இருக்கனும்…,சுரேஷ் ரெய்னா அட்வைஸ்.,ரோஹித் முடிவு என்ன?

0
பாகிஸ்தானுக்கு எதிரான பிளேயிங் லெவனில் இவர் இருக்கனும்...,சுரேஷ் ரெய்னா அட்வைஸ்.,ரோஹித் முடிவு என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான பிளேயிங் லெவனில் இவர் இருக்கனும்...,சுரேஷ் ரெய்னா அட்வைஸ்.,ரோஹித் முடிவு என்ன?

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இந்த பேட்ஸ்மேன் இருந்தே ஆக வேண்டும் என சுரேஷ் ரெய்னா ரோஹித்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா:

டி20 உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றுகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. இந்த சுற்றின் முடிவில் இரண்டு குரூப்களின் கீழ் முதல் 2 இடங்களை பெறும் 4 அணிகள் சூப்பர் 12ல் இணைய உள்ளது. இதனை தொடர்ந்து, சூப்பர் 12 சுற்றுகள் சனிக்கிழமை முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து, இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன் குறித்து நல்ல ஒரு தெளிவு இருப்பதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முன்பு தெரிவித்திருந்தார். அதில், ரோஹித் சர்மா, கே எல் ராகுல், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டிய, தினேஷ் கார்த்திக் ஆகியோர் முன்வரிசையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

T20 WC யில் யாரும் எதிர்பாராத அணியும் கோப்பையை வெல்லும்…, சவால் விட காத்திருக்கும் ஆப்கானிஸ்தான்!!

இந்த பிளேயிங் லெவன் குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ரோஹித்துக்கு அட்வெஸ் ஒன்றை வழங்கி உள்ளார். அதாவது, இந்திய அணியில் ஒரு இடது கை பேட்ஸ்மேன்னாவது முன் வரிசையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், 2007, 2011 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில், கம்பீர், யுவராஜ் சிங் இடது கை பேட்டிங்கால் அசத்தி இருந்தனர் என சுட்டி காட்டி உள்ளார். இதனை தொடர்ந்து, பிளேயிங் லெவனில் இடக்கை பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் இருப்பது மிக முக்கியம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here