
இந்தியாவில், பருவநிலை மாற்றத்தால் அதிக பாதிக்கப்படையும் இடங்களுக்கு உள்ளூர் நிலைக்கு ஏற்ப மாநில அரசு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகிறது. இந்த வகையில், கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில், அதிக அளவில் காற்று மாசுபாடு அடைந்து வருகிறது. இதனால், குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இருக்க, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, மாநிலத்தில் மாசு அளவு அதிகரித்து வருவதால், டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளும் அடுத்த 2 நாட்களுக்கு மூடப்படும் என தெரிவித்துள்ளார். நேற்று (நவம்பர் 2) அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பின் படி, இன்றும் நாளையும் (நவம்பர் 3 & 4) டெல்லியில் உள்ள விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்., வன்முறையை தடுக்க ஊரடங்கு நடவடிக்கை., அரசு புதிய உத்தரவு!!
In light of the rising pollution levels, all govt and private primary schools in Delhi will remain closed for the next 2 days
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 2, 2023