இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா – 8 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..!

1

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும் பரிசோதனை மையங்கள் அதிகரித்ததன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 7,93,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 475 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,604 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,95,513 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு – சிபிஐ விசாரணை நாளை தொடக்கம்..!

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 230599 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 127259 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 9667 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

1 COMMENT

  1. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நமது இந்தியாவின் ஜன தொகையான 135 கோடி மக்களில் இது வெறும் 0.016%தான்.. ஆகவே கவலை படும் அளவுக்கு பெரிய விஷயம் இல்லை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here