தடுப்பூசி போட்டவர்களுக்கு மரணம்??? – வைரலாகும் வீடியோ பதிவு!!!

0

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்  உயிரிழந்துவிடுவார்கள் என பிரெஞ்சு ஆய்வாளர் கூறியதாக சமூக வலைதளங்களில் பகீர் தகவல் வைரலாகி வருகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தடுப்பூசி போட்டவர்களுக்கு மரணம்:

கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக சந்தித்த இந்தியா; இரண்டாவது அலையை எதிர்த்து தீவிரமாக போராடிவருகிறது. தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில்; கடந்த வாரம் பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்தது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்; தற்போது தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள்; என்று சமூக வலைதளங்களில் பகீர் தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.

அதாவது “தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள்” என்று நோபல் பரிசு வென்ற லூக் மாண்டேக்னியர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தான்  இப்போது உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில்; பெருந்தொற்று காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் முறையை லூக் மாண்டேக்னியர் கேள்வி எழுப்பியுள்ளார் என்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள் என அவர் கூறவே இல்லை என்றும் தெரியவந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here