தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக தினமும் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், அதிகளவு மழை நீர் வயலுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவது சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, அடுத்த 48 மணிநேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருப்பினும் அடுத்த 3 நாட்களுக்கு அதிகப்படியான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மதுரையின் இடையப்பட்டி பகுதியில் 7 செமீ மழையும், குறைந்தபட்சமாக சோழவந்தான் பகுதியில் 4 செமீ மழையும் பதிவாகி உள்ளது. மீனவர்களுக்காக எந்த எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று விடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here