
சென்னையில் போக்குவரத்து நெரிசல், கட்டுமான பணிகள் உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை NSC போஸ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், கம்மாளம்பூண்டியைச் சேர்ந்த கௌரி என்ற பெண் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த விஷயத்தை அறிந்த முதல்வர் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அத்துடன் ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் நிதியுதவி கொடுப்பதற்கு பதிலாக சேதமடைந்த சாலைகளை சீர்படுத்தினால்- இன்னும் பல்வேறு உயிர்கள் இறப்பது தடுக்கப்படும். எனவே சென்னையில் அதிகரித்து வரும் விபத்துகளை தடுக்க தமிழக அரசு சாலை பணிகளை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆதார் அட்டைதாரர்களே.., மிஸ் பண்ணாம இத பண்ணிடுங்க.., உங்களுக்காகவே வெளியான சூப்பர் நியூஸ்!!!