பாரதி தாலி கட்டுவதற்காக காத்திருக்கும் வெண்பா, வெளிவரும் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்.., பரபரப்பான இறுதிக்கட்டம்!!

0
பாரதி தாலி கட்டுவதற்காக காத்திருக்கும் வெண்பா, வெளிவரும் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்.., பரபரப்பான இறுதிக்கட்டம்!!
பாரதி தாலி கட்டுவதற்காக காத்திருக்கும் வெண்பா, வெளிவரும் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்.., பரபரப்பான இறுதிக்கட்டம்!!

விஜய் டிவியின் முக்கிய சீரியலாக இருந்து வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில் அதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பரபரப்பான ப்ரோமோ:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருப்பது பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிபிரியன் சீரியலை விட்டு விலகிய நிலையில், டிக்டாக் பிரபலம் கண்ணம்மாவாக வினுஷா என்ட்ரி கொடுத்தார். இவரின் வருகைக்கு பின் சீரியல் விறுவிறுப்புடன் போய்கொண்டு இருக்கிறது. அதாவது குழந்தைகளுக்கு, டி என் ஏ டெஸ்ட் எடுத்தால் ஒரே நாளில் இந்த சீரியல் முடிந்து விடும் ஆனால் அதை வருட கணக்கில் டைரக்டர் இழுத்து கொண்டே போனார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் சலிப்பு அடைந்த ரசிகர்கள் சீரியலை விரைவில் முடித்து விடுங்கள் என்று இணையத்தில் தொடர்ந்து கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் கதைப்படி வெண்பா, பாரதியை திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைத்து விட்டார். அதே நேரம் பாரதி DNA டெஸ்ட் எடுக்க முடிவு எடுத்து விட்டார். இதையடுத்து கடந்த சில வாரங்களாக கிளைமாக்ஸ் நோக்கிய நகர்வு தான் கதையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது, அதில் வெண்பா பாரதிக்கு போன் செய்து நம்ம திருமணத்திற்குகாக நான் காத்திருக்கிறேன் என்று சொல்கிறார். மற்றொரு பக்கம் பாரதி லேப் டெக்னிசியனுக்கு போன் செய்து DNA டெஸ்ட் ரிப்போர்ட் எப்போது வரும் என கேட்க, அவர் நாளைக்கு தான் வரும் என சொல்கிறார். மேலும் வெண்பா – ரோஹித் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறுகிறது. இதையடுத்து என்ன நடக்கும் பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொள்வாரா? பரபரப்பான திருப்பங்களுடன் இனி எபிசோடுகள் வர இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here