Home விளையாட்டு இந்தியாவுக்கு காலிறுதி வாய்ப்பு பறிபோனது.., கோட்டை விட்ட குகேஷ், அர்ஜுன் எரிகைசி..!!

இந்தியாவுக்கு காலிறுதி வாய்ப்பு பறிபோனது.., கோட்டை விட்ட குகேஷ், அர்ஜுன் எரிகைசி..!!

0
இந்தியாவுக்கு காலிறுதி வாய்ப்பு பறிபோனது.., கோட்டை விட்ட குகேஷ், அர்ஜுன் எரிகைசி..!!

எய்ம்செஸ் ரேபிட் ஆன்லைன் செஸ் போட்டியில் இந்தியாவின் டி குகேஷ், அர்ஜுன் எரிகைசி மற்றும் விதித் சந்தோஷ் குஜ்ராதி ஆகிய மூவரும் காலிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளனர்.

காலிறுதி வாய்ப்பு பறிபோனது:

எய்ம்செஸ் ரேபிட் செஸ் போட்டியில் இந்தியாவின் குகேஷ் இரண்டாவது ஆட்டத்தில் வெற்றியுடன் முன்னிலை வகித்த நிலையில், இன்று ரிச்சர்ட் ராப்போர்ட்டிடம் தோல்விடைந்தார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் குகேஷ் 1.5-2.5 என்ற கணக்கில் தோல்வி கண்டார்.

இதையடுத்து சந்தோஷ் குஜராத்தியை போலந்தின் ஜான்-கிரிஸ்டோஃப் டுடா, 0.5-2.5 என்ற கணக்கில் சுலபமாக தோற்கடித்தார். இதர ஆட்டங்களில் அர்ஜுன் எரிகைசி, உலகின் நம்பர்-1 நார்வே வீரரை 0.5-2.5 என்ற கணக்கில் வீழ்த்தினார். ஆனாலும் முந்தைய இரண்டு போட்டிகளில் தோல்விடைந்ததால் இவருக்கும் காலிறுதி வாய்ப்பு பறிபோனது.

இந்த செஸ் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட 16 வீரர்கள் உள்ளனர். தற்போது இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு பறிபோனாலும் மற்ற வீரர்கள் மல்லுக்கட்டி வருகிறார்கள். ஆனாலும் இந்திய அணியின் சவால் முடிவுக்கு வந்தது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here