ச்சீ.., நிறுத்து.., உன்னால என்னோட சந்தோஷமே போச்சு.., கோபியை வாய்க்கு வந்தபடி பேசிய ராதிகா !!!

0
ச்சீ.., நிறுத்து.., உன்னால என்னோட சந்தோஷமே போச்சு.., கோபியை வாய்க்கு வந்தபடி பேசிய ராதிகா !!!
ச்சீ.., நிறுத்து.., உன்னால என்னோட சந்தோஷமே போச்சு.., கோபியை வாய்க்கு வந்தபடி பேசிய ராதிகா !!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் வீட்டில் நடந்த விஷயத்தை வச்சு கோபியிடம் மல்லுக் கட்டுகிறார் ராதிகா. மேலும் உன்னால எனக்கு எல்லா சந்தோஷமும் போச்சு என சண்டை போடுகிறார். உடனே கோபி எங்க அம்மா செஞ்ச எல்லாமே தப்பு தான். என்ன மன்னிச்சுடு ராதிகா என கெஞ்சுகிறார். இந்த பக்கம் குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டில் நடந்ததை நினைத்து வருத்தப்படுகின்றனர். அப்போது பாக்கியா நா எதுக்கு இங்க இருக்கனும் என்று கேட்க ஈஸ்வரி, ராமமூர்த்தி இருவரும் நீ இங்க தான் இருக்கனும் என்று சொல்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனா பாக்கியா நா இங்க இருக்குறது சரிப்பட்டு வராது என்று சொல்ல ஈஸ்வரி வெளியே போக கூடாது என சத்தியம் வாங்குகிறார். அடுத்ததாக ராதிகா, மயூ வீட்டுக்குள் வருகின்றனர். அப்போது மயூ உள்ளே வர தயங்க ராதிகா தொடர்ந்து ஈஸ்வரியை சீண்டி கொண்டே இருக்கிறார். இதனால் கடுப்பான ஈஸ்வரி இவள மாதிரி ஒருத்திய நா இதுவர பார்த்ததே இல்ல. இந்த ராதிகாவால் நம்ம நிம்மதியே போச்சு என வருத்தப்படுகிறார்.

அடுத்ததாக குடும்பத்தில் உள்ள அனைவரும் ஹாலில் அமர்ந்து வீட்டில் நடந்த பிரச்சனையை நினைத்து வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜெனி நாம இங்கிருந்து போயிடலாம் என்று கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே பாக்கியா அதெல்லாம் வேணாம் நம்ம இங்கேயே இருப்போம் என்று சொல்கிறார். பின் எழில் எப்படியாவது நம்ம பணத்தை கொடுத்துட்டா எல்லா பிரச்சனையும் முடிஞ்சுரும் என்று சொல்லி பாக்யாவுக்கு ஆறுதல் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here