‘காதல், கசக்குதய்யா’….,நாளை வெளியாகும் ‘காதல் Conditions Apply’ ட்ரைலர்….,

0
'காதல், கசக்குதய்யா'....,நாளை வெளியாகும் 'காதல் Conditions Apply' ட்ரைலர்....,
'காதல், கசக்குதய்யா'....,நாளை வெளியாகும் 'காதல் Conditions Apply' ட்ரைலர்....,

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் மஹத் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘காதல் Conditions Apply’. தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வித்தியாசமான காதல் கதைக்களத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஆர்.அரவிந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மஹத் உடன் நடிகை சனா, திவ்யதர்ஷினி, விவேக் பிரசன்னா, அபிஷேக் மற்றும் மகேஸ்வரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜூன் 16 ஆம் தேதியன்று திரையரங்குகளுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, படம் திரைக்கு வருவதற்கு முன்னதாக படத்தின் ட்ரைலரை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்களே கொண்டாடத் தயாராகுங்கள்….,ஜூன் 12 முதல் TNPL….,

அந்த வகையில் நாளை மாலை 5.04 மணிக்கு ‘காதல் Conditions Apply’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாகவும் அதனை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் காதல், சண்டை, நெருக்கம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் என்பதால் இது இளைஞர்களை வெகுவாகக் கவரும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here