பண்டிகை காலங்களில் வெளிவரும் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கும். அதுவும் நடிகர் விஜய் என்றால் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ரசிகர்கள் பட்டாளத்தை கையிலே பிடிக்க முடியாது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
வருகிற பொங்கல் பண்டிகை அன்று தளபதியின் வாரிசு படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் “ரஞ்சிதமே” மற்றும் “தீ தளபதி” பாடல்கள் வெளியானது முதல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வருகிறது. இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 67 படத்தில் தளபதியும் லோகேஷும் மாஸ்டர் படத்திற்கு பிறகு இணைய உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்துகின்றனர்.
இதையடுத்து தளபதி 67 படத்தில் நடிகர் விஜய் மும்பையில் கேங்ஸ்டராகவும், மெயின் வில்லனாக விஷாலும் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் தளபதி 67 பட பூஜையில் விஷால் பங்குபெறவில்லை மாறாக ஆக்சன் கிங் அர்ஜுன் கலந்து கொண்டார். இதனால் மெயின் வில்லனாக அர்ஜுன் கலக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.