மெல்லிசையாக வெளியான ‘அந்தகன்’ திரைப்பட பாடல்….,ரசிகர்கள் வரவேற்பு…,

0
மெல்லிசையாக வெளியான 'அந்தகன்' திரைப்பட பாடல்....,ரசிகர்கள் வரவேற்பு...,
மெல்லிசையாக வெளியான 'அந்தகன்' திரைப்பட பாடல்....,ரசிகர்கள் வரவேற்பு...,

நடிகர் பிரஷாந்த்தின் ‘அந்தகன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணிலே’ என்ற பாடலை தயாரிப்பாளர் தாணு இன்று வெளியிட்டுள்ளார்.

பாடல் வெளியீடு

தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். அந்த வகையில், ‘ஜோடி’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, மஜ்னு’, ‘வின்னர்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த நடிகர் பிரஷாந்த்திற்கு தற்போது 50 வயதாகிறது. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த திரைப்படம் ‘அந்தாதுன்’ என்ற ஹிந்தி சினிமாவின் ரீமேக் ஆகும். அந்த வகையில் தமிழில் தயாராகியுள்ள அந்தகன் திரைப்படத்தில் நடிகர் பிரஷாந்துடன் இணைந்து நடிகை சிம்ரன், நடிகர் கார்த்திக், பிரியா ஆனந்த், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஐஸ் ஆப்பிள் போல இருக்கும் மேனியை காட்டி ரசிகர்களை கவரும் சனம் …, சொக்கிப்போன இளசுகள் !!

இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ‘கண்ணிலே’ என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்ட இந்த பாடலை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஆர்.கே. ஆதித்யா பாடியுள்ளார். உமா தேவி வரிகளில் காதல் மெலடியாக வெளியாகியுள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here