ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ்…., ‘வா வாத்தி’ நியூ வெர்ஷன் ரிலீஸ்….,

0
ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ்...., 'வா வாத்தி' நியூ வெர்ஷன் ரிலீஸ்....,
ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ்...., 'வா வாத்தி' நியூ வெர்ஷன் ரிலீஸ்....,

‘வாத்தி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வா வாத்தி’ பாடலை நடிகர் தனுஷ் சொந்த குரலில் பாடி வெளியிட்டுள்ளார்.

பாடல் ரிலீஸ்

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வாத்தி’. நடிகர் தனுஷ், நடிகை சம்யுக்தா, சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பில் கடந்த 17 ஆம் தேதியன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது. அதே போல ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதிலும் குறிப்பாக, பாடகி ஸ்வேதா குரலில் வெளியான ‘வா வாத்தி’ பாடல் இணையதளத்தில் எக்கச்சக்கமான வியூஸ்களை பெற்றிருந்தது. இந்த நிலையில், ‘வா வாத்தி’ பாடலை நடிகர் தனுஷ் தனது வெர்ஷனில் பாடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மெல்லிசையாக வெளியான ‘அந்தகன்’ திரைப்பட பாடல்….,ரசிகர்கள் வரவேற்பு…,

அதாவது, ‘வாத்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த பாடலை நடிகர் தனுஷ், ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடினார். அப்போது, தனுஷ் குரலில் இந்த பாடலை கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் தனுஷ் தற்போது ‘வா வாத்தி’ பாடலை தனது சொந்த குரலில் பாடி இணையத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here