பெண் உரிமையை நசுக்க நினைக்கும் ஆப்கான் உயர்கல்வித்துறை – தலைவர்கள் கண்டனம்!!

0
பெண் உரிமையை நசுக்க நினைக்கும் ஆப்கான் உயர்கல்வித்துறை - தலைவர்கள் கண்டனம்!!
பெண் உரிமையை நசுக்க நினைக்கும் ஆப்கான் உயர்கல்வித்துறை - தலைவர்கள் கண்டனம்!!

ஆப்கானிஸ்தானில் தன்னுடைய சக ஆண் மாணவர்களுடன் அமர்ந்து படிக்க பெண் மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்றும் பெண்களுக்கு புதிய ஆடைக் குறியீடு அறிவிக்கப்படும் எனவும் பரபரப்பு உத்தரவை கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

சேர்ந்து உட்கார தடை:

சமீபத்தில் ஆப்கானை கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதிகள் அங்கு தற்காலிக அதிபரை நியமித்து ஆட்சி நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். இதில், அவர்கள் பதவி ஏற்கும் முன் பத்திரிக்கையாளர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் என தெரிவித்து இருந்தார்கள். ஆனால், பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு அநீதிகளையும், கொடுமைகளையும் இழைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதாவது, ஒரு 6 மாத கர்ப்பிணியான பெண் காவல் அதிகாரியை இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.

பெண் உரிமையை நசுக்க நினைக்கும் ஆப்கான் உயர்கல்வித்துறை - தலைவர்கள் கண்டனம்!!
பெண் உரிமையை நசுக்க நினைக்கும் ஆப்கான் உயர்கல்வித்துறை – தலைவர்கள் கண்டனம்!!

இது மட்டுமல்லாமல், ஆப்கானுக்கு எதிராக போராடிய பெண்களை பற்றிய செய்தி சேகரித்த பத்திரிகையாளர் இரண்டு நபரை இழுத்து சென்று அடித்து துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில், பெண்களால் குழந்தை மட்டும் தான் பெற்றுத்தர முடியுமே தவிர, பிற கடினமான பணிகளை செய்ய முடியாது. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை என்று ஆப்கானின் அமைச்சரவையில் பெண்கள் நியமனம் குறித்த சர்ச்சை கருத்தை தெரிவித்தனர்.

பெண் உரிமையை நசுக்க நினைக்கும் ஆப்கான் உயர்கல்வித்துறை - தலைவர்கள் கண்டனம்!!
பெண் உரிமையை நசுக்க நினைக்கும் ஆப்கான் உயர்கல்வித்துறை – தலைவர்கள் கண்டனம்!!

இதில், தற்போது தாலிபான் தீவிரவாதிகளின் முக்கிய நபராக கருதப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆப்கானில் படிக்கும் பெண்களுக்கு புதிய ஆடைக் குறியீடு அறிவிக்கப்படும் எனவும், அவர்கள் ஆண் மாணாக்கர்களுடன் அருகே அமர்ந்து படிக்க அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த அறிவிப்பு பெண்மையை முடக்கும் செயல் என உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here