தொடர்ந்து தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் – வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி!!

0

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின்  சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து அதிரடியான பல திட்டங்களை செய்லபடுத்தி வருகிறார். அதிலும் கொரோனா நிவாரண நிதி, மகளிருக்கு இலவச பேருந்து, கொரோனவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் என பல வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.

இந்நிலையில் சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (13 செப்டம்பர் 2021) நீட் தேர்வு விலக்கு குறித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அனிதா, தனுஷ் போன்ற மாணவர்கள் இனி தமிழகத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்பட கூடாது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

தற்போது மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளார். அதாவது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக கடந்த 1 மாத காலமாக தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் நகைக்கடன் தள்ளுபடியால் அரசுக்கு கூடுதலாக ரூ.6000 கோடி செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here