நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனல் முடக்கம்? – போலீசார் நடவடிக்கை!!

0
meera mithun
meera mithun

நடிகை மீரா மிதுனின் யூடுயூப் சேனலை முடக்க போலீசார் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். சமீபத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சிலரை சாதி ரீதியாக நடிகை மீரா மிதுன் விமர்சித்துப் பேசியது, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து பட்டியல் சாதியினரை இழிவாகப் பேசியதால் இவர் மீது அளிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, காவல்துறை விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அந்த வீடியோவில் தனது ஆண் நண்பருடன் இணைந்து மீரா மிதுன் பேசியுள்ளதால், அவரின் ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மீரா மிதுன் மீது 7 வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்ச்சை பதிவுகளை பதிவிட மீரா மிதுன் பயன்படுத்தும் யூடுயூப் சேனலை முடக்க போலீசார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here