தமிழ் இனத்திற்கே தலைகுனிவு – நடிகர் கார்த்தி வேதனை

0

சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பால் நரம்பியல் டாக்டர் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் சிலர் தாக்குதல் நடத்தி தடுத்தனர். இச்சம்பவம் மக்களிடையே அதிர்ச்சி & மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பினரும் சமூக வலைதளம் மூலமாக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

டாக்டர் இறுதி சடங்கு தாக்குதலுக்கு பலரும் கண்டனம்

சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்து சிலர் வன்முறையில் ஈடுபட்டு தாக்குதலும் நடத்தினர்.இதற்க்கு டாக்டர்கள் முதல் சினமா பிரபலங்கள் மற்றும் மக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.நடிகர் கார்த்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்

நடிகர் கார்த்தி கண்டனம்

நடிகர் கார்த்தி சிவகுமாரின் மகன் ஆவார்.இவர் சமூகத்தில் நடக்கும்  பிரச்சினைக்கும் எப்போதும் தனது கருத்துக்களுடன் குரல் கொடுப்பவராக நடிகர் கார்த்தி இருக்கிறார்.டாக்டர் சைமனின் இறுதிச் சடங்கில் நடந்த சம்பவத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  மருத்துவரின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள அவர் “டாக்டர் சைமன் அவர்களின் இறுதிச் சடங்கை இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். திரு. சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்!” எனக் கூறியுள்ளார்.

சூர்யா கார்த்தியின் கொரோனா நிவாரணம்

கொரோனா நிவாரணத்திற்காக கார்த்தியும் தனது முயற்சியைச் செய்து வருகிறார். அவர் தனது சகோதரர் சூர்யா மற்றும் தந்தை சிவகுமாருடன் இணைந்து FEFSI உறுப்பினர்களின் நலனுக்காக ரூ. 10 லட்சம் நிதியளித்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here