Home பொழுதுபோக்கு சினிமா பொன்னியின் செல்வன் பட நடிகருக்கு ஏற்பட்ட சோகம் – எல்லாம் நல்லா போன நேரத்துல இப்படி ஆயிருச்சே!!

பொன்னியின் செல்வன் பட நடிகருக்கு ஏற்பட்ட சோகம் – எல்லாம் நல்லா போன நேரத்துல இப்படி ஆயிருச்சே!!

0
பொன்னியின் செல்வன் பட நடிகருக்கு ஏற்பட்ட சோகம் – எல்லாம் நல்லா போன நேரத்துல இப்படி ஆயிருச்சே!!
பொன்னியின் செல்வன் பட நடிகருக்கு ஏற்பட்ட சோகம் - எல்லாம் நல்லா போன நேரத்துல இப்படி ஆயிருச்சே!!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.

பொன்னியின் செல்வன்:

கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், எந்தவொரு நாட்டினாலும் கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகமெங்கும் மாபெரும் வெற்றியை தழுவி உள்ளது. இந்த சமயத்தில் ஜெயம் ரவிக்கு திடீரென உடல் நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

வாகன ஓட்டிகளுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் – அக்.27 வரை அபராதம் இல்லை! உள்துறை அமைச்சர் அறிவிப்பு!!

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று மாலை எனக்கு கொரோனா இருப்பது உறுதி ஆனது , அதனால் நான் வீட்டிலேயே தனிமையில் உள்ளேன், என்னை சந்தித்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள், மேலும் மாஸ்க் அணிவது அவசியம் என பணிவுடன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here