Home செய்திகள் வாகன ஓட்டிகளுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் – அக்.27 வரை அபராதம் இல்லை! உள்துறை அமைச்சர் அறிவிப்பு!!

வாகன ஓட்டிகளுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் – அக்.27 வரை அபராதம் இல்லை! உள்துறை அமைச்சர் அறிவிப்பு!!

0
வாகன ஓட்டிகளுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் – அக்.27 வரை அபராதம் இல்லை! உள்துறை அமைச்சர் அறிவிப்பு!!
வாகன ஓட்டிகளுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் -

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, வரும் அக்.27ம் தேதி வரை வாகன ஓட்டிகள் போக்குவரத்தில் தவறு செய்தால் அபராதம் வசூலிக்க போவதில்லை என அரசு அறிவித்துள்ளது

நோ ஃபைன் :

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. மக்கள் அனைவரும், பரபரப்புடன் இந்த பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இது போன்ற நேரங்களில், பொது இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இந்த நேரத்தில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களும் நடைபெறுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தடுக்க மாநில காவல்துறை, வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பது நடைமுறையில் இருந்து வரும் ஒன்று. தற்போது வாகன ஓட்டிகளுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக, முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வருகிற 27 ஆம் தேதி வரை, வாகன ஓட்டிகளிடம் இருந்து மாநில காவல்துறை எந்த அபராதமும் வசூலிக்காது என்று குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.

எதுவும் பேசாதிங்க…, ரசிகர்களிடம் கூறிய விராட் கோஹ்லி…, பயிற்சியில் ஏற்பட்ட சலசலப்பு!!

இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற தேவையில்லை எனப் பொருள் கொள்ளக் கூடாது, தவறு செய்தால் அபராதம் கட்ட தேவையில்லை என்பது மட்டுமே இதன் நோக்கம் என தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் தீபாவளி முடியும் வரை, தங்களுக்கு நோ ஃபைன் என்ற மிதப்பில் வாகன ஓட்டிகள், மகிழ்ச்சியுடன் சென்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here