டி20 WC : முதல் யுத்தம்…, சொந்த மண்ணில் ஜெயிக்குமா ஆஸ்திரேலியா? நியூசிலாந்துக்கு எதிராக போட்டி!!

0
டி20 WC : முதல் யுத்தம்..., சொந்த மண்ணில் ஜெயிக்குமா ஆஸ்திரேலியா? நியூசிலாந்துக்கு எதிராக போட்டி!!
டி20 WC : முதல் யுத்தம்..., சொந்த மண்ணில் ஜெயிக்குமா ஆஸ்திரேலியா? நியூசிலாந்துக்கு எதிராக போட்டி!!

நியூசிலாந்துக்கு எதிராக டி 20 உலக கோப்பை தொடரில் தனது முதல் போட்டியை தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா வென்று கெத்து காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலக கோப்பை 2022:

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் சுற்றுகள் நேற்றுடன் முடிந்த நிலையில், இன்றிலிருந்து சூப்பர் 12 சுற்றுகள் துவக்க உள்ளன. இதில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியை SCG மைதானத்தில் இந்திய நேரப்படி 12.30 மணிக்கு எதிர்கொள்ள உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் வெற்றியுடன் இந்த உலக கோப்பை தொடரை தொடங்க வேண்டும் என்று அதிகம் முனைப்புடன் களமிறங்கும். இதற்கு ஏற்றாற் போல், ஆஸ்திரேலிய அணி, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன் உள்ளிட்ட அதிரடியான வீரர்களை கொண்டே களமிறங்க உள்ளது. இது போல நியூசிலாந்து அணியும் வெற்றியுடன் உலக கோப்பையில் அடி எடுத்து வைக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.

T20 உலக கோப்பையில் இந்தியா எதிர்கொள்ளும் போட்டிகள்…, எங்கு எப்போது யாருடன் முழு விவரம் இதோ!!

இதனால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆஸ்திரேலியாவில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், போட்டியின் போது மழை குறுக்கிடுமோ? என்ற அச்சமும் எழுந்து வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியா நேரப்படி மாலை 6 மணிக்கு போட்டி துவங்குவதால் அப்போது மழை பெய்வதற்கு வாய்ப்பு குறைவு என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த போட்டி நடைபெறும் மைதானமானது பேட்டிங்க்கு அதிக சாதகம் என்பதால், டாஸ் வெல்லும் அணி சேஸிங் செய்தே வெற்றி பெற எண்ணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here