குழந்தைகளுக்கான “பால் ஆதார் கார்டு” இருக்கா?? எப்படி வாங்குவது.., முழு விவரம் இதோ!!!

0
குழந்தைகளுக்கான
கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் பிறந்த குழந்தைகளுக்கான ஆதார் “பால் ஆதார் அல்லது நீல நிற ஆதார்’ என அழைக்கப்படுகிறது. இந்த நீல நிற ஆதார் அட்டை விண்ணப்பிக்க வேண்டும் என்றால் நேரடியாக ஆதார் மையத்துக்கு சென்று குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், மருத்துவமனை டிஸ்சார்ஜ் சீட்டு, பெற்றோர்களின் ஆதார் அட்டை போன்றவற்றை காண்பிக்க வேண்டும். அதன் பின் தேவையான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குழந்தையின் போட்டோவை கொடுத்தால் விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு 60 நாட்களுக்குள் குழந்தைக்கு ஆதார் அட்டை வழங்கப்படும். இப்படி இருக்கும் சூழலில் இப்போது பால் ஆதார் அட்டை ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

  • UIDAI என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்கு சென்று “My Aadhar” பகுதியில், “Book an appointment” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
  • இப்போது “Child Aadhaar” என்ற கேட்டரிகியை தேர்வு செய்து, அதில், “New Aadhar” என்பதை தேர்ந்தெடுத்து, உங்களது செல்போன் நம்பர் மற்றும் கேப்ட்சா நம்பரை பதிவிட வேண்டும்.
  • பிறகு “Relationship with Head of Family” என்ற ஆப்ஷனில் உள்ள “Child (0-5 years)” என்பதை தேர்ந்தெடுத்து, உங்கள் குழந்தையின் விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • அதன் பின் அருகிலிருக்கும் ஆதார் சேவை மையத்தில் வசதியான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்து, உங்கள் முன்பதிவை உறுதி செய்த பின் எளிதில் பால் ஆதாருக்கு விண்ணப்பித்து விடலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here