Monday, June 17, 2024

நிதிநெருக்கடியை சமாளிக்க அமைச்சர்களின் ஊதியம் குறைப்பு – குஜராத் அரசு முடிவு!!!

Must Read

குஜராத் மாநிலத்தின் நிதிநெருக்கடியை சமாளிக்க எம்.எல்.ஏகள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

குஜராத் அரசு முடிவு:

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பல வித பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாம் – உச்சநீதிமன்றம் அனுமதி!!

நிதி நெருக்கடியை சமாளிக்க பல முயற்சிகள் அரசால் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக குஜராத் அரசு ஒரு முடிவினை எடுத்துள்ளது.

சம்பள குறைப்பு:

குஜராத்தில் விஜய் ரூபாணி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கின்றது. கொரோனா பரவலால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க எம்.எல்.ஏகள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அவசர சட்டம் ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மார்ச் மாதம் வரை பின்பற்றபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

gujarath cm vijay rupani
gujarath cm vijay rupani

சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஊதியமும் குறைக்கப்படும் என்றும் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்க்கும் ஊழியர்களின் ஊதியமும் குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இப்படி இவர்களின் சம்பளத்தை குறைப்பதன் மூலமாக அரசுக்கு 6.27 கோடி ரூபாய் நிதியாக கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் கடந்த மாதம் உத்தரகாண்ட் அரசும் நடவடிக்கை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மக்களே உஷார்.. அடுத்த 5 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு .. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜூன் 17) முதல் அடுத்து வரும் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -