விஜய் நடித்து வெளிவராமல் இருக்கும் படம் மாஸ்டர்.இந்த படம் ஏப்ரல் 09 2020 அன்றே வெளிவரவேண்டியது கொரோனா காரணத்தால் வெளிவராமல் இருக்கிறது.அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்று காலை மாஸ்டர் படத்தின் பாடல் உருவான விதத்தை வெளியிட்டுள்ளார்.
வாத்தி ரெய்டு உருவான விதம்
![vijay anirudh](https://enewz.in/wp-content/uploads/2020/06/vijay-anirudh.jpg)
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்துள்ளனர்.அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மாஸ்டர் படத்தின் பாடல் உருவான வீடியோவை அனிருத் வெளியிட்டுள்ளார். மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி ரெய்டு பாடலின் பீட்ஸ்களை முதன் முதலில் உருவாக்கிய பிறகு தனது இசைக்குழுவுடன் அதை கேட்டு ரசிக்கும் வீடியோவை அனிருத் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர் “நேரம்: காலை 6.45 மணி, ஒரு நாள் காலை.. ஸ்டுடியோவில் #VaathiRaid இன் பீட்டை முதன்முறையாகக் கேட்டபோது எங்களது ரியாக்ஷன்” இதுதான் என அனத வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகிவருகிறது.வாத்தி ரெய்டு பாடல் ஒரு வேகமான இசை கொண்ட ஒரு rap பாடலாகும். இப்பாடலை ‘தெருக்குரல்’ அறிவு எழுதி பாடியுள்ளார். இப்பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது யூடியூபில் 14 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது,
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
![master](https://enewz.in/wp-content/uploads/2020/06/master.jpg)
கொரோனா தளர்வுகள் ஊரடங்கு முடிந்த பின் மாஸ்டர் படம் வெளி வரும் என எதிர்பாக்கப்படுகிறது.தளபதியின் ரசிக புல்லைங்கோ எல்லாமே வைடிங்கீழ் இருக்கிறார்கள்